உள்நாடு

அடுத்த வாரத்துக்குள் நாட்டின் செயற்பாடுகளை வழமைக்கு

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையிலான முதலாவது அமைச்சரவை கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது.

அடுத்த வாரத்துக்குள் நாட்டின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருவது தொடர்பில் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அரச நிறுவனங்களின் செயற்பாடுகளையும் வழமை போன்று கொண்டு செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் சட்டத்தை நிலைநாட்டுவதற்காக பாதுகாப்பு தரப்பினருக்கு தேவையான அதிகாரங்களை வழங்குவதற்கு இதன்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

2022 A/L மாணவர்களுக்கு 80% வருகை கணக்கில் எடுக்கப்படமாட்டாது

தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனம்

மேலும் 03 பேர் பூரண குணமடைந்தனர்