உள்நாடு

அடுத்த வருடத்தின் முதல் மாதத்தின் இறுதி வாரம் கருப்பு போராட்ட வாரமாக பிரகடனம்

(UTV | கொழும்பு) –  அடுத்த வருடத்தின் முதல் மாதத்தின் இறுதி வாரம் கருப்பு போராட்ட வாரமாக பிரகடனம்

நாட்டில், அரசாங்கத்தின் தன்னிச்சையான வரி திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜனவரி இறுதி வாரத்தை கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனப்படுத்தவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது, நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்திற் கொண்டு அதிக வரிகளை அறவிட அரசாங்கம் தீர்மானித்ததன் காரணமாக தொழில் வல்லுநர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் 20,000 வைத்தியர்களிடம் கையெழுத்து சேகரிக்கப்பட்டு வருவதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், ஜனவரி 10ஆம் திகதி கையொப்பமிடப்பட்ட மனு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை வரலாற்றில் 280 மில்லியன் ரூபா தொகையுடன் சிக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்

editor

ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய 59 இலங்கையர்கள் உயிரிழப்பு – அமைச்சர் விஜித ஹேரத்

editor

கரதியான குப்பை மேட்டில் தீ பரவல்