அரசியல்உள்நாடு

அடுத்த ஜனாதிபதி நாமல் ராஜபக்ஷ என்கிறார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

இலங்கையில் உள்ள பல வெளிநாட்டு தூதரகங்கள் நாமல் ராஜபக்ஷவை நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக அடையாளம் கண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“ஒரு கட்சியாக, நாமல் ராஜபக்ஷவின் பயணம் சிறப்பாக முன்னேறி வருவதாக நாங்கள் நம்புகிறோம்.

கிராமவாசிகள் ஏற்கனவே அவர் அடுத்த ஜனாதிபதியாக வருவார் என்று பேசி வருகின்றனர்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அரசாங்கம் போலியான குற்றச்சாட்டுகளின் மூலம் நாமல் ராஜபக்ஷவை சிதைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Related posts

உக்ரேன் – ரஷ்யா மோதல் : இலங்கை வாக்களிக்கவில்லை

பேருந்து கட்டணம் தொடர்பில் தீர்மானமில்லை

பங்குச்சந்தை நடவடிக்கைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பம்