வகைப்படுத்தப்படாத

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – இருவர் உயிரிழப்பு

(UTV|RUSSIA) ரஷியா தலைநகர் மாஸ்கோவில் உள்ள குரோபோட்கின்ஸ்கை என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு எண்ணற்ற குடும்பங்கள் வசித்து வருகின்றன.

அந்த நிலையில், நேற்று காலை அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளத்தில் உள்ள ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. கொழுந்துவிட்டு எரிந்த தீ, கண்இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது.

அதனால் அங்கு கரும் புகைமண்டலம் உருவானது. அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த அனைவரும், அலறிஅடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறினர். தீவிபத்து குறித்த தகவல் கிடைத்ததும், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் தீயின் கோரப்பிடியில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இதையடுத்து, தீப்பிடித்த வீட்டுக்குள் சிக்கி இருந்த 4 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை.

 

 

 

 

Related posts

ගෝඨාභයගේ නඩුව යලි කල්යයි

Finance Ministry says no to Tissa’s daughter’s appointment

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இன்று அவசரமாக கூடுகிறது!