உலகம்விளையாட்டு

அஞ்சல் ஓட்டத்தில் இலங்கைக்கு இரண்டு தங்கம்

இந்தியாவில் நடைபெற்று வரும் 4வது தெற்காசிய தடகள சம்பியன்ஷிப் போட்டியில், இன்று (25) மாலை நடைபெற்ற 4×100 மீட்டர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் ஆண், பெண் ஆகிய இரு பிரிவுகளிலும் இலங்கை வீரர்கள் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

ஆண்கள் இறுதிப் போட்டியில் இலங்கை வீரர்கள் 39.99 வினாடிகளில் ஓடி முடித்தனர்.

இதில் வெள்ளிப் பதக்கத்தை இந்தியாவும் (40.65 வினாடிகள்), வெண்கலப் பதக்கத்தை பங்களாதேஷும் (40.94 வினாடிகள்) வென்றன.

பெண்கள் பிரிவில் இலங்கை வீராங்கனைகள் 44.70 வினாடிகளில் போட்டி தூரத்தை நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை வென்றனர்.

இம்முறையும் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது,

அவர்கள் 44.93 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்தனர்.

மாலைத்தீவு 47.79 வினாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கத்தை வென்றது.

Related posts

ஒரு நாள் போட்டிகளில் மற்றுமொரு மைல்கல்லை கடந்த தோனி

துனிசியாவை 2-1 என வீழ்த்தியது இங்கிலாந்து

இந்தியாவை உருட்டி எடுக்கும் ‘யாஸ்’