சூடான செய்திகள் 1

அசாத் சாலிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்

(UTV|COLOMBO)  நீதிபதிகளும் தீவிரவாத அமைப்புகளின் உறுப்பினர்​களென, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்திருந்தமைத் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென, ஒருங்கமைக்கப்பட்ட குற்ற தடுப்புப் பிரிவினர், கொழும்பு பிர​தான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று தெரிவித்துள்ளனர்.

அசாத் சாலி தொடர்பில், சட்டத்தரணி சீ. தொலவத்தவால் செய்யப்பட்டுள்ள முறைபாட்டுக்கு அமைய, முன்னாள் ஆளுநருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதென்றும் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

மே மாதம் 4ஆம் திகதி அசாத் சாலியின் அறிவிப்பு தொடர்பில் வெளியான அறிக்கைக்கு அமைய, தொகுக்கப்பட்ட, தொகுக்கப்படாத காணொளிகள் குற்ற தடுப்புப் பிரிவினரிடம் வழங்குமாறு, இலத்திரனியல் ஊடகங்கள் இரண்டுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

கறைபடிந்த விருப்பு வாக்கு முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் எமக்கில்லை…

ஆசிரியர் நியமனங்களை வழங்கிய ஜனாதிபதி ரணில்,,,!

பிற்போடப்பட்ட சந்திப்பு இன்று(03) இரவு