உள்நாடு

அக்மீமன பகுதியில் துப்பாக்கிச் சூடு – சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி பலி

பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் (SP) சிறிதத் தம்மிக, அக்மீமன, தலகஹ பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறிதத் தம்மிக தனது வீட்டிற்கு அருகில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரி அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

தலையில் மற்றும் மார்பில் பல தோட்டாக்கள் பாய்ந்ததால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவர் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை அடையாளம் காணும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறிதத் தம்மிக, பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் கண்காணிப்பாளராக பணியாற்றியவர்.

இவர் சிறைச்சாலை நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகித்தவர் என்பதால், இந்த கொலை தொடர்பாக பல ஊகங்கள் எழுந்துள்ளன.

இதுவரை கொலையின் நோக்கம் தெளிவாகவில்லை என்றாலும், பொலிஸார் அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகின்றனர்.

Related posts

உதுமாலெப்பை எம்.பி க்கு புதிய நியமனம் வழங்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

editor

அரச பகுப்பாய்வு அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவு [VIDEO]

நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு