உள்நாடுபிராந்தியம்

அக்கரைப்பற்று, மீரா ஓடை குளத்தில் விழுந்து 2 வயது குழந்தை பலி

அக்கரைப்பற்று பகுதியில் உள்ள மீரா ஓடை குளத்தில் விழுந்து 2 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

தண்ணீரில் மிதந்த குழந்தையை அவதானித்த உறவினர்கள், குழந்தையை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதும் குழந்தை உயிரிழந்தது.

இன்று தனது இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடவிருந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.

கடந்த ஜனவரி மாதமும் மீரா ஓடை குளத்தில் விழுந்து 6 வயது பிள்ளையொன்று உயிரிழந்திருந்தது.

இந்த இறப்புகளால் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுன்ன அப்பகுதி மக்கள், நேற்று (15) மாலை, “மீரா ஓடை குளத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அல்லது சுவர் கட்டப்பட வேண்டும்” என்று கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

Related posts

மதுபான சாலைகளுக்கு பூட்டு!

காலிமுகத்திடல் மக்கள் போராட்டத்திற்கு இன்றுடன் 100 நாட்கள்

கொழும்பில் இதுவரை 06 கொரோனா தொற்றாளர்கள்