உள்நாடுபிராந்தியம்

அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்தவர் துப்பாக்கியுடன் சிலாபம் புலனாய்வுப் பிரிவினரால் கைது

அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி மற்றும் தோட்டாவை வைத்திருந்த ஒருவரை சிலாபம் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சிலாபம் விஷப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 3 தோட்டாக்கள், சுங்க வரி செலுத்தாமல் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட 460 சிகரெட்டுகள் மற்றும் சட்டவிரோத மதுபானம் காய்ச்சப் பயன்படுத்தப்படும் 202 லீற்றர் கோடா ஆகியவற்றுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

சிலாபம் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், சிலாபம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 45 வயதுடையவர் என்றும், அவர் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பாராளுமன்ற தேர்தல் – வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

editor

இன்றுமுதல் உயர்த்தப்பட்ட எரிபொருட்களின் விலை உயர்வு! (விபரம்)

IMF மற்றும் உலக வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த நிதியமைச்சர் அமெரிக்காவுக்கு