அரசியல்உள்நாடுபிராந்தியம்

அக்கரைப்பற்று ஏழை மக்களுக்கு அதிகாரிகள் செய்த துரோகம் வெளிச்சத்திற்கு வந்தது

ஏழைமக்களுக்கு அதிகாரிகள் செய்த துரோகம் – சபூர் ஆதம் – மாநகரசபை உறுப்பினர் ACMC

வெள்ள நிவாரணம் தொடர்பாக கரையோர அக்கரைப்பற்று – காதிரியா, மீராவோடை, பதுர் நகர் போன்ற பகுதிகளில் ஏன் அரச நிவாரணம் வழங்கப்படவில்லை? என்ற கேள்விக்கு கிடைத்த பதில்

மனதை உலுக்குகிறது…

காரணம் என்ன தெரியுமா?

நவம்பர் 26, 27 ஆகிய நாட்களில் குறித்த பகுதிகளின் சில கிராம உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகத்திற்கு அனுப்பிய Observation Report இல் “யாரும் பாதிக்கப்படவில்லை” Nil Report என்று அறிவித்திருக்கிறார்கள்!

இதை உறுதி செய்ய நான் RTI (தகவல் அறியும் உரிமைச் சட்டம்) மூலம் உத்தியோகபூர்வ தகவல்களை கோரினேன். அதனை முகநூலிலும் பதிவிட்டிருந்தேன்.

இன்று அந்த அறிக்கைகள் கைக்கு வந்தன. பார்த்தால் – சொல்லப்பட்டதெல்லாம் உண்மை! அதிகமான கிராம உத்தியோகத்தர்கள் Nil Report தான் அனுப்பியுள்ளனர்.
(அந்த அறிக்கைகளையும் இங்கே இணைக்கிறேன்)

ஆனால் உண்மை என்ன?
நவம்பர் 26, 27, 28 – மின்சாரம் துண்டிக்கப்பட்ட நாட்கள்
– நீரில் மூழ்கிய வீடுகள் – மீராவோடைக்கு பின்னால்
நீர் நிரம்பிய ஒரு வீட்டில் நான்கு குழந்தைகள் ஒரு சிறிய தகட்டுப் பிங்கானில் சிறிதளவு உணவை பகிர்ந்து சாப்பிட்ட காட்சி…அதை பார்த்த நண்பர் “என் மனம் அப்படியே வெந்த புண் போல மாறியது” என்று சொல்லும் போது நம்மால் அமைதியாக இருக்க முடியுமா?

அந்த இருட்டிலும், மின்சாரம் இல்லாத நேரத்திலும் நாங்கள் சிலர் மாநகர உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து
சமைத்த உணவை மாநகரசபை வாகனங்களில் அப்பகுதிகளுக்கு கொண்டு சென்றோம். அதையும் முகநூலில் பதிவு செய்திருந்தோம்!

அப்படியானால் கேள்வி ஒன்று தான்… இவ்வளவு துயரத்தை கடந்து வந்த இந்த கரையோர மக்களுக்கு
அரசாங்க நிவாரணத்தை இல்லாமல் செய்த அந்த மனநிலை என்னவொரு மனநிலை?

இன்னும் ஒரு அதிர்ச்சி…
அம்பாறையில் கடமை புரியும்
ஒரு நண்பர் சொன்ன தகவல்: அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 240 பேருக்கான நிவாரணத் தொகை வழங்கப்படாமல் திரும்பிச் சென்றுள்ளது!

பிரதேச செயலாளர் பல முயற்சிகள் செய்த போதும், “வேலைப்பளு அதிகரிக்கும்” என்ற எண்ணத்தில் சில கிராம உத்தியோகத்தர்கள் திட்டமிட்டு Nil Report அனுப்பியதாகவே தகவல்கள் சொல்கின்றன.

இதிலேயே மிகவும் வேதனைக்குரியது…
இந்த மக்கள் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்
“ஒரு நாள் நிவாரணம் வரும்” என்று…பாவம்… இந்த மக்கள் உண்மையிலேயே பாவம்.

Related posts

இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பம்!

ரணிலை சந்தித்த பின்னர் சிறையிலிருந்து வருத்தத்துடன் வௌியேறிய மஹிந்த

editor

சீனித் தொழிற்சாலைகள் ஆபத்தில் காணப்படுகின்றன – சஜித் பிரேமதாச

editor