உள்நாடுபிராந்தியம்

அக்கரைப்பற்றில் உடல் ஆரோக்கிய மேம்பாட்டு நிகழ்வுகள்.!

“மறுமலர்ச்சி நகரம்” எனும் கருப்பொருளில் உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை, அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியவற்றுடன் இணைந்து அக்கரைப்பற்று மாநகர சபை ஒழுங்கு செய்திருந்த இரத்ததானம், தொற்றா நோய்களுக்கான பரிசோதனை மற்றும் இலவச கண் பரிசோதனை உள்ளிட்ட உடல் ஆரோக்கிய செயற்றிட்ட நிகழ்வுகள் புதன்கிழமை (17) அக்கரைப்பற்று ஹல்லாஜ் அரங்கில் நடைபெற்றன.

இந்நிகழ்வுகளில் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ், ஆணையாளர் எம்.என்.எம். நௌபீஸ் உட்பட உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிகழ்வுகளில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் பங்குபற்றி, இலவச சேவைகளை பெற்றுக் கொண்டதுடன் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, இரத்ததானம் வழங்கினர்.

-அஸ்லம் எஸ்.மெளலானா

Related posts

தேர்தல் திகதிக்கு எதிரான மனு பரிசீலனை ஆரம்பம்

பொத்துவில் – பொலிகண்டி ஆர்ப்பாட்டம் நான்காவது நாளாக இன்றும்

அமெரிக்க டொலர் நாணயத் தாள்களுடன் இருவர் கைது