உள்நாடு

ஹோமாகம பகுதியில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு

(UTV|கொழும்பு)- ஹோமாகம-கந்தலான பகுதியில் இருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நான்கு கைக்குண்டுகள், 2 டெட்டனேட்டர்கள் ,600 வெடிமருந்துகள் உட்பட் மேலும் சில வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோமாகம பிட்டிபன பகுதியில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

இன்றைய வெப்பச்சுட்டெண்

”சஞ்சாரக உதாவ 2025” ஜனாதிபதி அநுர தலைமையில் ஆரம்பம்.

editor

2025 ஆம் ஆண்டின் முதல் விண்கல் மழை இன்று பார்க்கலாம்

editor