உள்நாடு

ஹோட்டல் உரிமையாளர் சடலமாக மீட்பு

(UTV|கொழும்பு) – கெஸ்பெவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இன்று(07) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் 50 வயதுடைய கெஸ்பாவ பகுதியை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் மனைவியும் காயங்களுக்கு உள்ளாகி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பிலியந்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தபால் மூலம் வாக்களிக்கும் விண்ணப்பங்களை ஒன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்

தவணைப் பரீட்சைகளை திட்டமிட்டபடி நடத்த திட்டம்

மக்கள் காங்கிரஸின் செயலாளர்- YLS ஹமீட் காலமானார்!