உள்நாடுபிராந்தியம்

ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் சந்தேக நபர் ஒருவரை அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலைய மது ஒழிப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மது ஒழிப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அநுராதபுரம் பொலிஸ் பிரிவின் மாத்தளை சந்தி சமஹி மாவத்தை பகுதியில் நேற்று (12) மாலை நடத்திய சுற்றிவளைப்பின் போது பெண் சந்தேக நபரை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் 200 மில்லிகிராம் அளவுடய ஹெரோயின் போதைப் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் அநுராதபுரம் மாத்தளை சந்தி சமஹி மாவத்தை பகுதியை வசிப்பிடமாக கொண்ட 50 வயதுடைய பெண் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலைய மது ஒழிப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டுள்ளதோடு, விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.

Related posts

எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பேச்சாளராக பிரசாத் சிறிவர்தன

editor

இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; சந்தேகநபர்கள் கைது

சர்வதேச நாணய நிதியத்தினால் நிதி ஒதுக்கம்