உலகம்

ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 92 பேர் பலி

(UTV |  ஈரான்) – ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என்று பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த மாதம் 16ம் திகதி விசாரணையின்போது அவர் திடீரென மர்மமான முறையில் இறந்தார். பொலிசார் அவரை அடித்து கொன்றுவிட்டதாக கூறி போராட்டங்கள் நடந்து வருகிறது. மாஷா அமினி இறந்த பிறகு போராட்டங்கள் தீவிரம் அடைந்து உள்ளது. 150-க்கும் மேற்பட்ட இடங்களில் பேரணி, ஆர்ப்பாட்டம் போன்றவை நடந்து வருகிறது. இந்த போராட்டத்தை ஒடுக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆனாலும் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. போராட்டம் நடத்தும் பெண்கள் ஹிஜாப் உடைகளை தீ வைத்து எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அவர்களை பொலிசார் கைது செய்து வருகிறார்கள். தொடர் போராட்டத்தால் ஈரானில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதுவரை போராட்டக்காரர்கள்- பொலிசாருக்கும் இடையே நடந்த மோதலில் 92 பேர் இறந்துவிட்டதாக ஈரான் மனித உரிமை குழு தெரிவித்து உள்ளது. இதில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ஈரான்- ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் 41 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக அந்த குழு தெரிவித்துள்ளது. போராட்டம் மேலும் தீவிரமடையாமல் தடுக்க ஈரானில் சமூக வலை தளங்கள் முடக்கப்பட்டு உள்ளது.

Related posts

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வர முயன்ற பெண் அகதி கைது

editor

அமெரிக்க தூதரக கட்டடத்தை கைப்பற்றியது சீனா

மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா ஜூனில்