உலகம்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல்கள் ஒப்படைப்பு – 45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை இன்று (3) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட 3 பணயக்கைதிகள் உடல்களும் கடந்த 2023-இல் அப்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட இஸ்ரேல் வீரர்கள் மூவரது உடல்கள் என்று அடையாளம் காணப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

காஸா போர்நிறுத்த ஒப்பந்தம் அமுலான பிறகும், ஹமாஸிடமிருந்து 20 பணயக்கைதிகள் உடல்கள் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 8 உடல்கள் ஹமாஸிடம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பணயக்கைதிகள் விடுவிக்கப்படும்போதும் இஸ்ரேல் தரப்பிடமிருந்து 15 பலஸ்தீனர்கள் உடல்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், இதுவரை மொத்தம் 270 பலஸ்தீனர்கள் உடல்களை இஸ்ரேல் ஒப்படைத்துள்ளது.

Related posts

கடும் வறட்சியில் 20 லட்சம் மக்கள் பாதிப்பு

இதுவரை 231 ஊடகங்கள் மூடப்பட்டுள்ளன

சர்ச்சையில் பரிஸ் டெஸ்கார்ட்ஸ் பல்கலைக்கழகம்