அரசியல்உள்நாடு

ஹஜ் குழுவினால் 5 மில்லியன் ரூபா வழங்கி வைப்பு

அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மத வழிபாட்டுத் தலங்களை புனரமைப்பதற்காக, ஹஜ் குழுவினால் 5 மில்லியன் ரூபா நிதியானது நேற்று (08) முற்பகல் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.

இது தொடர்பான காசோலையை ஹஜ் குழுவின் தலைவரும் பட்டயக் கணக்காளருமான ரியாஸ் மிஹ்லார், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவியிடம் கையளித்தார்.

இந் நிகழ்வில் சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் முனீர் முளப்பர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் மற்றும் ஹஜ் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் எம்.எஸ்.எம். அஸ்லம் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

-ரிஹ்மி ஹக்கீம்

Related posts

மற்றுமொரு 80 கிலோ எடை கொண்ட Sapphire Cluster

ரணில் தற்றுணிவுடன் செயற்பட்டார் : ஜனாதிபதி அநுரவுக்கு தற்றுணிவு கிடையாது – விமல் வீரவன்ச

editor

பேருந்து தரிப்பிடத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

editor