கிசு கிசு

ஹகீம் அணி சஜித்திற்கே ஆதரவு

(UTV|கொழும்பு) – தேர்தலுக்கான கூட்டணி குறித்து தாம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என, முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று(24) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சஜித் பிரேமதாசவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் கூட்டணியில் இணைவதற்கான ஆயத்தங்களை ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்து கொண்டிருப்பதாகவும், தான் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து தேர்தலில் களமிறங்க அழைப்பு விடுத்ததாக ஊடகங்களில் வெளியான செய்தியானது திரிவுபடுத்தப்பட்டது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

Related posts

பிரதமர் மாளிகையில் இருந்த எருமைகள் ரூ.23 லட்சத்துக்கு ஏலமா?

உலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்…

நான் எதற்கும் பயந்தவன் அல்ல