சூடான செய்திகள் 1

ஸ்ரீ.சு கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கு அழைப்பு

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்துத் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் இன்று (13) கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கட்சி செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 341 தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுக்கு இது குறித்து அறிவித்துள்ளதாகவும் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Related posts

இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன நியமனம்

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 781 ஆக அதிகரிப்பு

UTV இன் சிறுவர் தினக் கொண்டாட்டம்