அரசியல்உள்நாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அப்துல் வாசித் நியமனம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாசித் இன்று (28.06.2025) நியமிக்கப்பட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்ட முதுமானி அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் பரிந்துரையில் இந்த நியமனம் கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் (PC) அவர்களினால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, கட்சியின் மாவட்ட செயற்குழு செயலாளர் ஏ சி சமால்தீன், உலமாக்கள், முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Related posts

புதுப்பொழிவுடன் Amazon College & Campus சந்தைப்படுத்தல் காட்சியரை அங்குரார்ப்பணம்.

விஜயகலா மகேஸ்வரன் விசாரணை ஆணைக்குழுவில்

நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை