உள்நாடு

ஷானி அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு முன்னிலையில்

(UTV | கொழும்பு) – சிறைவைக்கப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று(28) முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடற்படை புலனாய்வு பிரிவின் முன்னாள் கனிஷ்ட அதிகாரி காமினி செனவிரத்ன மற்றும் பிரதம கனிஷ்ட அதிகாரி கே.பி.சமிந்த ஆகியோர் முன்வைத்த முறைப்பாட்டுக்கமைய ஆணைக்குழு அவருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கடந்த 2006 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தமக்கு எதிராக மனித படுகொலை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மேற்குறித்த இருவரும் ஆணைக்குழுவில் முறையிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏகமனதான தீர்மானம்

15 பயங்கரவாத அமைப்புகளுக்குத் தடை – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு – முழு விவரங்கள் இணைப்பு

editor

தற்போதைய புகையிரத நேர அட்டவணையில் வாராந்தம் மாற்றம்