வகைப்படுத்தப்படாத

வௌ்ளவத்தை கட்டிட சரிவு : இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மேலும் இரண்டு பேரை மீட்கும் பணி தீவிரம்!

(UDHAYAM, COLOMBO) – வெள்ளவத்தையில் இடம்பெற்ற கட்டிட இடுபாடுகளுக்களுக்குள் சிக்கி காயமடைந்த நிலையில், சிகிச்சைபெற்று வந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெள்ளவத்தை சாலிமன் வீதியிலுள்ள ஐந்து மாடி கட்டிடம் ஒன்று நேற்று சரிந்து வீழ்ந்ததில் 23 பேர் காயமடைந்நதனர்.

அவர்களில் 14 பேர் களுபோவில போதனா மருத்துவமனையிலும் ஏனையவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கட்டிட இடிபாடுகளுக்கு சிக்கியிருந்த இரண்டு பேர் நேற்று மாலை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

இதேவேளை, கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மேலும் இரண்டு பேரை மீட்கும் பணிகள் பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 

Related posts

பாடசாலைகள் மூடப்படவுள்ளன

இலங்கை அகதிகள் கனடாவில் அகதி அந்தஸ்த்து கோரியுள்ளனர்

வழக்கினை மீளப்பெற்றுக் கொள்ளாவிட்டால் தேர்தலை பிற்போட நேரிடும்