அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

வௌியேற தயார் – மஹிந்தவுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் – சாகர காரியவசம்

அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவித்தால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்யத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், நல்லாட்சி அரசாங்கத்தால் மஹிந்த ராஜபக்ஷவுக்கு உரிய உத்தியோகபூர்வ இல்லம் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளதால், அதிலிருந்து வெளியேற வேண்டுமானால் அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

அப்படி ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டால், மஹிந்த ராஜபக்ஷ ஒரு கணம் கூட அங்கே தங்க மாட்டார் என்றும், அது குறித்து இங்கும் அங்கும் கருத்துக்களை வெளியிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உத்தியோகபூர்வ இல்லம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

மிக மோசமாக தாக்கப்பட்டிருக்கும் காசா மக்கள் – என்.சிறீகாந்தா.

பதில் பிரதம நீதியரசர் ஜனாதிபதி அநுர முன்னிலையில் பதவிப்பிரமாணம்

editor

ஜனாதிபதி ரணில் தலைமையில் பிக்குனிகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு.