உள்நாடு

வை.எம்.எம்.ஏ. அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் [PHOTOS]

(UTV | கொழும்பு) – அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் ஆலோசனையின் கீழ் மத்திய வை.எம்.எம்.ஏ. கிளையும், வை.டப்ளியூ.எம்.ஏ.  (பெண்கள் பிரிவும்) இணைந்து  இரத்ததான முகாம் ஒன்றினை இன்று(14) ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்வு தலைவர் எம்.என் காமில் தலைமையில் கொழும்பு – 09 தெமட்டகொட வீதியில் அமைந்துள்ள வை.எம்.எம்.ஏ. தலைமையக மண்டபத்தில்  நடைபெற்றது.

தற்போதைய கொரோனா தொற்றுள்ள  சமகாலத்தில் இரத்தத் தட்டுப்பாடு இருப்பதின் காரணத்தினால்  தேசிய இரத்த வங்கியின் விசேட வேண்டுகோளுக்கு அமைய இத்தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த இரத்ததான முகாம் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டதாக வை.எம்.எம்.ஏ. யின் பதில் தேசியத் தலைவர் சஹீத் எம். ரிஸ்மி தெரிவித்தார்.

அத்துடன்  இந்த நிகழ்வில் இன மத பேதமின்றி அனைவரும் கலந்து கொண்டு  இரத்ததானம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது தேசிய இரத்த வங்கியின் தேசிய இரத்த வங்கி வைத்தியர் ஷானிகா சில்வா . தாதியர்கள்,  தெமடகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சாந்த ஜெயசிங்க, பொது சுகாதார அதிகாரி அப்துர் ரஹ்மான் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் பிரதிநிதி மௌலவி நுஸ்ரத் நௌபர்  வெளிமட சுமன ஸ்தீவர தேரர் இளம் மாதர் அமைப்பின் தலைவி தேசமான்ய பவாஷா தாஹா முன்னால் வை.எம்.எம்.ஏயின் தலைவர்கள் இளம் மாதர் அமைப்பின் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

ஜனாதிபதியை அவசரமாக சந்தித்த ஹரீஸ் – நடந்தது என்ன ?

பிரதமர் தலைமையிலான குழு இத்தாலி பயணம்

கணேமுல்ல சஞ்சீவ கொலை – இஷாராவின் தாயும், சகோதரரும் விளக்கமறியலில்

editor