உள்நாடு

வைத்தியர் மஹேஷி விஜேரத்னவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மஹேஷி விஜேரத்னவை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Related posts

பேருவளை மீன்பிடி துறைமுக செயற்பாடுகள் வழமைக்கு

எட்கா ஒப்பந்தம் தொடர்பில் அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்ட தகவல்

editor

சந்திரசிறி சூரியஆராச்சி தொடர்ந்தும் விளக்கமறியலில்