அரசியல்உள்நாடு

வைத்தியசாலையில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான வைத்தியருக்கு நீதி கிட்ட வேண்டும் – சஜித் பிரேமதாச

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நேற்று இரவு கடமையில் ஈடுபட்டிருந்த பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வர எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் நான் இன்று (11) நடவடிக்கை எடுத்தேன் பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு ஒரு வாரத்திற்குள்ளாகவே இவ்வாறான ஒரு சம்பவம் நடந்துள்ளமையானது, எமது நாட்டில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவையை உணர்த்துகிறது.

எனவே, இந்த விவகாரம் குறித்து அரசாங்கம் விரைந்து கவனம் செலுத்தி, இது தொடர்பான முறையான சட்டங்களை வகுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு எதிர்க்கட்சி தமது முழுமையான ஆதரவை நல்கும்.

Related posts

கட்டுப்பாட்டை இழந்து கெப் வண்டி விபத்தில் சிக்கியது – இருவர் உயிரிழப்பு

editor

ரயில்வே ஊழியர்களது பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

7 துப்பாக்கிகளையும் ஒப்படைத்தார் யோஷித ராஜபக்ஷ

editor