உள்நாடு

வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ள நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர்கள்

இணை சுகாதாரப் பிரச்சினை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாளை (05) வேலைநிறுத்தப் போராட்டத்தைத் ஆரம்பிக்கவுள்ளதாக நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கலந்துரையாடலை அமைச்சர் தவிர்த்து வருவதாக அதன் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

நிறைவுகாண் வைத்திய சேவையின் பதவி உயர்வுகள் தொடர்பாக வாக்குறுதியளிக்கப்பட்ட தீர்வுகளை வழங்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

அதன்படி, கலந்துரையாடல் இன்றி வேலைநிறுத்தத்தைக் கைவிட நடவடிக்கை எடுக்கப்படாது என்று நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

Related posts

அக்கறைப்பறில் அதாவுல்லாஹ், தவம் இணைந்து நடாத்தும் மீலாத் நிகழ்வு தொடர்பான கலந்துரையாடல்!

editor

மாணவர் தலைமுறைக்கு பயனளிக்காத குறுகிய பார்வை கொண்ட கல்விச் சீர்திருத்தத்தை நோக்கியே இந்த அரசாங்கம் நகர்கிறது – சஜித் பிரேமதாச

editor

பதில் பொலிஸ்மா அதிபரின் செயற்பாடு தொடர்பில் சட்டமா அதிபர் அதிருப்தி