உள்நாடு

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் இன்றும் தொடர்கின்றது

(UTV | கொழும்பு) -வேலையற்ற பட்டதாரிகளின் சங்கம் மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் சங்கம் ஆகியன ஆரம்பித்த போராட்டம் இன்று(24) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

அரச தொழில் வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை முன்வைத்து வேலையற்ற பட்டதாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் தமக்கு புதிய வேலைகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்ட போதிலும் புதிய அரசாங்கத்தின் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அவர்களின் நியமனங்கள் இரத்து செய்யப்பட்டிருப்பதாக எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Related posts

வானத்தை தொடும் அளவு உயரும் மின் கட்டணம்!

அரசாங்கத்திடம் சரியான கொள்கையொன்று இல்லை – 15% வரியை உடனடியாக நீக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

editor

வவுனியா விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலி