உள்நாடுபிராந்தியம்

வேண்டாம் வேண்டாம் பொய் வாக்குறுதி பிரதமரின் 2ம் கட்ட வாக்குறுதியின் இறுதி நாள் இன்று

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் 33 ஆவது நாளாகவும் இன்று (19) சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தருணத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் தீர்வுக்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தின் படி இன்றுடன் இறுதி நாள் எனவும் குறித்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தங்களது விவசாய நிலத்தை அபகரித்து தனியார் கம்பனிகளுக்காக சூரிய மின் சக்தி உற்பத்திக்கு வழங்கப்பட்டதை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“வேண்டாம் வேண்டாம் பொய் வாக்குறுதி” எனும் பிரதான சுலோக அட்டையை காட்சிப்படுத்தியவாறு முத்து நகர் விவசாயிகள் தீர்வு வேண்டி போராடி வருகின்றனர்.

பரம்பரே பரம்பரையாக விவசாயம் செய்து வந்த காணியை அபகரித்ததால் சுமார் 352 ஏழை விவசாய குடும்பங்கள் நடுத்தெருவில் இறக்கப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் ஆளும்தரப்பு மீது விவசாயிகள் நம்பிக்கையிழந்த நிலையில் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி அன்றாட ஜீவனோபாயம் இழந்த நிலையில் தொடர் சத்தியாக் கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருகோணமலை சீனக்குடா விமான நிலையத்துக்கு நேற்று (18) விஜயம் செய்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை குறித்த விவசாயிகள் பேரணியாக வந்து சந்திக்கவுள்ள நிலையிலும் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

தங்களுக்கான நிரந்தர தீர்வை விரைவாக வழங்குமாறும் பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடத்தில் இவ் விவசாயிகள் கோருகின்றனர்.

-ஹஸ்பர் ஏ.எச்

Related posts

மொட்டு சின்னத்திற்கு வாக்களிப்பதை தவிர மக்களுக்கு மாற்று வழிமுறை ஏதும் கிடையாது- சாகர காரியவசம்

சதித்திட்டம் தீட்டியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை – சிவநேசதுரை சந்திரகாந்தன்

editor

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை – மீளாய்வு விண்ணப்பங்கள் இன்று முதல்

editor