உள்நாடுபிராந்தியம்

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியது – மூவர் வைத்தியசாலையில்

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகலை பகுதியில் இன்று (28) மாலை பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் காரில் பயணம் செய்த மூவர் சிறு காயங்களுடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டியிலிருந்து நுவரெலியா வழியாக பண்டாரவளை நோக்கி பிரதான வீதியில் வேகமாகச் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று வீதியைவிட்டு விலகி குடை சாய்ந்து விபத்துக்குள்ளானது.

இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு

மின்சார சபை 2023 ஆம் ஆண்டிற்கான அபரிதமான இலாபத்தை அடைந்துள்ளது

கலாநிதி பட்டம் விவகாரம் – பாராளுமன்ற அதிகாரிகள் மூவரிடம் சிஐடி வாக்குமூலம்

editor