உள்நாடு

வெள்ளியன்றுக்குள் நாடு முடக்கப்படாவிடின் தொழிற்சங்கங்கள் அதனை செய்யும்

(UTV | கொழும்பு) –  அரசாங்கம் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நாட்டை முடக்குவதற்கான தீர்மானத்தை எடுக்காவிட்டால் தொழிற்சங்கங்களின் ஊடாக நாட்டை முடக்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தேசிய தொழிற்சங்க மையம் தெரிவித்துள்ளது.

அதன் தேசிய அமைப்பாளர் வசந்த சமரசிங்க அரச மற்றும் தனியார்த்துறை பிரிவுகளை உள்ளடக்கிய தொழிற்சங்கங்களின் பங்கேற்புடன் நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பில் தெரிவிக்கையில்;

“.. மக்களின் பாதுகாப்பு தொடர்பில் சிந்திக்காது அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

எனவே அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து குறித்த நடவடிக்கையினை எடுக்கவுள்ளனர்..” எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

இளைஞர்கள் 11 பேர் கடத்தல் விவகாரம் – வழக்கு ஒத்திவைப்பு

இலங்கையில் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கு VAT வரி விதிப்பு

editor

சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் – வெளியான தகவல்

editor