உள்நாடு

வெள்ளவத்தையில் E சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

வெள்ளவத்தை பொலிஸார் சுமார் 3.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள “e” சிகரெட்டுகளுடன் ஒருவரைக் கைது செய்துள்ளனர்

சந்தேக நபர் 620 e-சிகரெட்டுகளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை, ஸ்டாஃப் வீதியில் உள்ள வாசனை திரவியங்கள் மற்றும் சொக்லட்டுகள் விற்பனை செய்யும் நிலையத்தில் சட்டவிரோதமாக e-சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சம சுற்றிவளைக்கப்பட்டு, சிகரெட்டுகளுடன் அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ராஜகிரியவைச் சேர்ந்த 34 வயதுடையவர்.

Related posts

திடீர் சுற்றிவளைப்பு சோதனை – 18 கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

editor

8,435 பேருக்கு நிரந்தர ஓய்வூதியத்துடன் நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

நாட்டுக்கு துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்க படுவார்கள் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

editor