உள்நாடுசூடான செய்திகள் 1

வெள்ளத்தால் முல்லைத்தீவு மக்கள் அவதி!

(UTV | கொழும்பு) –

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக வெள்ளத்தில் தத்தளித்த பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 880 குடும்பங்களைச் சேர்ந்த 2687 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவு, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்கள் பிரிவு ஆகிய பிரிவுகளில் உள்ள பல கிராமங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிரதேச செயலாளர் உதவி பிரதேச செயலாளர் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஊழியர்கள் கிராம அலுவலர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் மக்களுக்கான சமைத்த உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை ஏற்பாடு செய்து வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

களுத்துறை மாணவி மரணம் –  நீதி மன்றின் முன்பாக பெற்றோர் மௌன போராட்டம்

மொட்டுவின் தேசிய பட்டியல் வௌியானது.

editor

இதுவரை 901 கடற்படையினர் குணமடைந்தனர்