உள்நாடு

வெளியேறிச் சென்றார் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேறிச் சென்றார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் பதவியில் இருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக நேற்று (07) இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் அதிகளவிலான மக்களின் பங்கேற்புடன் தொடர்ச்சியாக இன்று (08) நடைபெற்ற நிலையில் வைத்திய அத்தியட்சகர் வெளியேறினார்.

இதனையடுத்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக நடைபெற்ற போராட்டமும் நிறைவுக்கு வந்தது.

போராட்டகாரர்களுடன் கலந்துரையாடிய வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, தானே தற்போதும் வைத்திய அத்தியட்சகர் எனவும் தற்போது சுகவீன விடுமுறையில் இருப்பதாகவும், குறித்த நிலைமை தொடர்பில் பேசுவதற்காக கொழும்புக்கு செல்லவுள்ளேன் என தெரிவித்து வெளியேறினார்.

Related posts

Clean Sri lanka வேலைத்திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

editor

அநுராதபுரத்திற்கு சென்றார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

editor

அரசியலமைப்பு சபை மீண்டும் இன்று கூடவுள்ளது.