உள்நாடு

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது!

சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (06) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் அம்பாந்தோட்டை – தங்காலை, ஹேனகட்டுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாத்தறை வலஸ்கல பிரதேசத்தில் வசிக்கும் 57 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 8,010 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தங்காலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தேசபந்துவின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்த சீராக்கல் மனு

editor

மகாராணிக்கு இலங்கை பாராளுமன்றத்தில் அனுதாபப் பிரேரணை

‘அலிவத்த ஹசித’ கைது