உள்நாடுபிராந்தியம்

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது

துப்பாக்கி மற்றும் ஐஸ் (ICE) போதைப்பொருளுடன் முல்லேரியா, பாரோன் ஜயதிலக்க மாவத்தையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை கைது செய்தபோது அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்றும், 9 தோட்டாக்களும், சுமார் 13 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 43 வயதுடைய வேபட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

online சட்டத்தில் திருத்தம் செய்ய தயார் – டிரான் அலஸ்

கடந்த 6 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் 3.7 பில்லியன் டொலர் வருமானம் – அமைச்சர் விஜித ஹேரத்

editor

ஊரடங்குச் சட்டம் தொடர்பான அறிவித்தல்