அரசியல்உள்நாடு

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை – அமைச்சர் ஆனந்த விஜேபால

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அடங்கிய பல குழுக்கள் அந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

குருநாகலில் ஊடகங்களிடம் உரையாற்றிய அமைச்சர், இந்த குற்றவாளிகள் மத்திய கிழக்கு உட்பட பல நாடுகளில் இருப்பதாகவும், அவர்களைக் கைது செய்ய சர்வதேச பொலிஸ் மூலம் சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மலேசியாவில் இருப்பதாக சமூக ஊடகங்கள் மற்றும் வெகுஜன ஊடகங்கள் மூலம் சமீபத்தில் தகவல் பரப்பப்பட்டதாகவும், இந்த தகவல் துல்லியமானது அல்ல என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related posts

நாட்டை கட்டியெழுப்ப தொழில்நுட்ப புரட்சியொன்று அவசியமாகும்.

கடற்படை உறுப்பினர்கள் 1,795 பேருக்கு பதவி உயர்வு

முட்டை – கோழி இறைச்சி விலைகளில் மாற்றம்