உள்நாடு

வெலிசறை கடற்படை முகாம் இன்று முதல் வழமைக்கு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த வெலிசறை கடற்படை முகாம் இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளது.

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் பலர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையிலேயே குறித்த கடற்படை முகாம் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்நிலையிலேயே நாளை முதல் கட்டம் கட்டமாக வெலிசறை கடற்படை முகாம் மீண்டும் திறக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

CEYPETCO விலையும் அதிகரிப்பு

ரஞ்சித் மத்தும பண்டார – ஆஷூ மாரசிங்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

கடந்த 24 மணித்தியாலயத்தில் 502 : 03 [COVID UPDATE]