உள்நாடு

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளுக்கு கொரோனா தொற்று இல்லை

(UTV|கொழும்பு) – வெலிக்கடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் எந்தவொரு கைதிக்கு அல்லது அதிகாரிகளுக்கோ கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக இராணுவத்தளபதி லெப்டின் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

எனினும், கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் முடிவுகள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் வெலிக்கடை சிறைச்சாலையின் கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மரண தண்டனைக் கைதிகள்

அப்போது நாங்கள் சண்டை பிடித்தோம் ஆனால் இப்போது நாம் இந்தியாவின் நண்பர்கள் என்கிறார் டில்வின் சில்வா!

editor

வாக்காளர் இடாப்பை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

editor