வகைப்படுத்தப்படாத

வெனிசூலா – கொலம்பிய எல்லை மீளத் திறப்பு

4 மாதங்களின் பின்னர் வெனிசூலா – கொலம்பிய எல்லை மீளத் திறக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிகளை அடுத்து, வெனிசூலா – கொலம்பிய எல்லையை மூடுமாறு, வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ கடந்த பெப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தார்.

மேற்படி வெனிசூலா மக்களுக்கான உணவு மற்றும் மருந்து விநியோகத்தில் பாரிய சிக்கல் ஏற்பட்டதுடன் பலர் நாட்டை விட்டும் வௌியேறியிருந்தனர்.

தற்போது மீண்டும் எல்லை திறக்கப்பட்டதன் பின்னர் 10,000க்கும் மேற்பட்ட மக்கள், தமக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசையில் காத்திருப்பதாக, சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

 

Related posts

மாலத்தீவின் நிலைமைகளை உன்னிப்பாக அவதானிக்கும் இந்தியா..

மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு இன்று…

Australian High Commissioner calls on Raghavan