உள்நாடுபிராந்தியம்

வெட்டு பாணில் மனித காயத் தோல் துண்டு கண்டுபிடிப்பு – ஹட்டன் பேக்கரியில் பரபரப்பு சம்பவம்

ஹட்டன் பிரதேசத்தில் உள்ள ஒரு பேக்கரியில் தயாரிக்கப்பட்ட வெட்டு பாணில் மனித காயத் தோலின் ஒரு பகுதி கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று (25) இரவு உணவிற்காக ரூ. 180 இற்கு வெட்டு பாண் வாங்கிய வாடிக்கையாளர், அதை உண்ண முயன்றபோது, ஒரு துண்டில் விரல் காயத் தோல் இருப்பதை கண்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து, அவர் பாணையும், அந்த காயத் தோல் துண்டையும் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

குறித்த பேக்கரி உரிமையாளர் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக, முன்னர் பலமுறை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

தற்போதைய சம்பவத்தை அடுத்து, பேக்கரி உரிமையாளருக்கு எதிராக மேலும் பல வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

மௌலவியின் கருத்து – போராட்டத்தில் மாணவிகள்.

ஈஸ்டர் தாக்குதல் ராஜபக்ஷவுக்கு விசுவாசமான இலங்கை அதிகாரிகள் உடந்தை – செனல் 4 வெளியிடப்போகும் செய்தி

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதங்களைப் பொருட்படுத்தாமல் பாலஸ்தீன மக்களுக்காக முன்நிற்க நாம் தயார் – சஜித் பிரேமதாச

editor