உள்நாடுபிராந்தியம்

வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி பஸ் விபத்து – 3 பேர் படுகாயம்

கதிர்காமம் சென்று திரும்பிய யாத்திரிகர்ளை மட்டக்களப்பு ஆரையம்பதியில் இறக்கிவிட்டு திரும்பிய பேருந்து கிரான்குளத்தில் விபத்தி சிக்கிய நிலையில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று காலை (30) மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

கதிர்காமம் புனித யாத்திரையை நிறைவு செய்த யாத்திரிகர்களை ஆரையம்பதியில் இறக்கி விட்டு மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதி வழியே தேற்றாத்தீவு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த பேருந்து கிரான்குளம் சரஸ்வதி வித்தியாயலயத்திற்கு அருகாமையில் பயணிக்கும் போது வீதியை விட்டு விலகி வீதியோரமிருந்த வம்மி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து இடம்பெறும் போது பேருந்தில் பஸ் சாரதியும் உதவியாளர்கள் இருவர் இருந்துள்ள நிலையில் மூவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தோர் பாண்டிருப்பு களுதாவளை பகுதியை சேர்ந்தவர்களாகும். விபத்தில் பேருந்து பாரிய சேதத்துக்குள்ளான நிலையில் வம்மி மரமும் முறிந்து வீதியில் விழுந்துள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

ஜனாதிபதி அநுர தலைமையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்

editor

மன்னார் நகர சபை முதல்வராக வசந்தன் – பிரதி முதல்வராக உசைன்!

editor

தனிமைப்படுத்தல் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் – GMOA எச்சரிக்கை