உள்நாடு

வீதியிறங்கிய சுகாதார தரப்பினர்

(UTV | கொழும்பு) – அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தைச் சேர்ந்த பணியாளர்கள் நாடளாவிய ரீதியில் இன்று தொடர் வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

30 வருட சேவையை பூர்த்தி செய்த குடும்ப சுகாதார பணியாளர்களுக்கு விசேட தரத்திற்கு பதவி உயர்வு வழங்குவதை இடைநிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அரசாங்க கதிரியக்க தொழிநுட்ப நிபுணர்கள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

கதிரியக்க பாதுகாப்பு சேவைகளை வேறு தொழிலுக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இந்த வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பிய பெண் கைது

கத்தார் வாழ் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட போட்டி

சாதாரண தர பரீட்சை தொடர்பான அறிவித்தல்