அரசியல்உள்நாடு

வீட்டிலிருந்து வெளியேறுவதில், எனக்கு எவ்விதமான கவலையும் இல்லை – ஒரு கோடி ரூபாய் செலவிட்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறானவை – மைத்திரிபால சிறிசேன

தமது தனிப்பட்ட செலவுகளுக்காக கடந்த 2024 ஆம் ஆண்டு ஒரு கோடி ரூபாவை செலவிட்டதாக கூறப்படும் புள்ளி விபரங்கள் முற்றிலும் தவறானவை என, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனமொன்றுக்கு தகவல் வழங்கிய அவர்:

கொழும்பிலுள்ள மற்றுமொரு வீட்டுக்கு நான் இடம்பெயரவுள்ளேன்.

கடந்த 2024 ஆம் ஆண்டு எனது தனிப்பட்ட செலவுகளுக்காக ஒரு கோடி ரூபா செலவிடப்பட்டதாகக் கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை.

முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரது வீடுகளும் தற்போது மூடப்பட்டுள்ளன.

இதனால், அவற்றை வன விலங்குகள் ஆக்கிரமித்துள்ளன.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட வீட்டிலிருந்து வெளியேறுவதில், தமக்கு எவ்விதமான கவலையும் இல்லை.

ஓரிரு நாட்களில் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறவுள்ளேன்.

Related posts

BREAKING NEWS – முன்னாள் ஜனாதிபதி ரணில் விளக்கமறியலில்

editor

இலங்கை மின்சார சபை தலைமை காரியாலயத்தில் அமைதியின்மை

அரச ஊடக நிறுவனங்களுக்கு திறைசேரியில் இருந்து நிதி