அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

வீட்டிலிருந்து உணவு பெற முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு அனுமதி

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (22) உத்தரவிட்டது.

இதேவேளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு வீட்டிலிருந்து உணவு பெற அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.

Related posts

ஒலுவில் துறைமுகம் இந்தியாவுக்கு விற்பனை? மோடியின் பிரதிநிதி விஜயத்திற்கு எதிர்ப்பு

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க வெளியிட்ட விசேட அறிவிப்பு

editor

கட்டுநாயக்க பதற்ற சம்பவ நபருக்கு எதிரான தீர்மானம்!