உள்நாடுபிராந்தியம்

வீடொன்றில் இருந்து தம்பதியினர் சடலமாக மீட்பு – ஹுங்கம பகுதியை உலுக்கிய சம்பவம்

ஹூங்கம வடிகல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கூர்மையான ஆயுதங்களால் அவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹூங்கம, ரன்ன, வடிகல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

28 வயதுடைய கணவரும் அவரது மனைவியுமே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் குறித்த தம்பதியினர் தற்காலிகமாக தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.

எவ்வாறாயினும் தம்பதியினர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சடலங்கள் மீதான பிரேத பரிசோதனை இன்று (7) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து ஹூங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

20வது அரசியலமைப்பு திருத்தம் – குழு அறிக்கை நாளை

அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களினதும் விலையில் மாற்றம்

வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை!