அரசியல்உள்நாடு

வீடுகளில் பிள்ளைகளுக்கு உலகக் கல்வி மட்டும் போதாது – ஒவ்வொரு வீடுகளிலும் மார்க்க அறிஞர்கள் உருவாக வேண்டும் – அஷ்ரப் தாஹிர் எம்.பி

வீடுகளில் பிள்ளைகளுக்கு உலகக் கல்வி மட்டும் போதாது – ஒவ்வொரு வீடுகளிலும் மார்க்க அறிஞர்கள் உருவாக வேண்டும் – அஷ்ரப் தாஹிர் எம்.பி

இது, நிந்தவூர் அல் மஸ்ஹர் பெண்கள் உயதரப் பாடசாலையில் நடைபெற்ற இன்றைய கல்விக்கண்காட்சியின் இரண்டாம் நாள் நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்து உரையாற்றிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களின் இதயம் தொட்ட வார்த்தைகள்.

இன்றைய உலகம் மின்னல் வேகத்தில் மாறிக்கொண்டிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி, உலக அறிவு, போட்டித் தன்மை — இவை அனைத்தும் நிச்சயமாக அவசியம் என்பதில் இரண்டாம் கருத்தில்லை. ஆனால் உலக அறிவோடு மார்க்க அறிவு இணையும் போதுதான் வளர்ச்சி என்பது முழுமையடையும்.

இன்றைய சமூகத்தில் நாம் காணும்
பல குழப்பங்கள், தவறான சிந்தனைகள், இளைஞர்களின் வழிதவறல்கள் — இவை அனைத்திற்கும் அடிப்படைக் காரணம் மார்க்கக் கல்வியின் பற்றாக்குறை தான்.

இதனை உணர்த்தும் விதமாக
கௌரவ அஷ்ரப் தாஹிர் அவர்கள் கூறிய கருத்து மிகப் பொருத்தமானதும், காலத்தின் தேவைப்பாடாகவும் இருந்தது.

அவர் கூறியவை வெறும் அரசியல் பேச்சல்ல. மாறாக, தனது குடும்பத்தில் தானே முன்னுதாரணமாக நின்று,
மார்க்க அடிப்படையில் பிள்ளைகளை உருவாக்கிக் காட்டிய பின்னரே
அவர் இதனை வலியுறுத்தியிருந்தார்.

“மார்க்கம் என்பது வழிபாட்டில் மட்டும் அல்ல, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் ஒளி புகட்டும் வழிகாட்டி.”

இத்தகைய மார்க்க உணர்வும் சமூகப் பொறுப்பும் கொண்ட தலைவர்கள்
அரசியலில் உருவாகுவது, நம் சமூகத்துக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

இன்றைய பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகத் தலைவர்கள் அனைவரும் மார்க்கக் கல்வியின் அவசியத்தை உணர்ந்து, மார்க்க அறிவும் உலக அறிவும் இணைந்த சமநிலை தலைமுறையை உருவாக்க வேண்டும்.

Related posts

தென் கிழக்கு பல்கலையின் உப வேந்தர் பதவிக்கு முன்மொழிந்த பெயர்களை நிராகரித்தார் ஜனாதிபதி அநுர

editor

பங்களாதேஷ் கடற்படை போர் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்!

editor

புத்தாண்டில் நடந்த சோக சம்பவம்