அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | புத்தளத்தில் ரிஷாட் பதியுதீனால் 08 கோடி ரூபாய் செலவில் மூன்று மாடி பாடசாலை கட்டிடம் திறந்து வைப்பு

புத்தளம், நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலத்திற்கு தேவையாக இருந்த பாடசாலைக்கட்டிடம் இன்று (13) பாடசாலையின் அதிபர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியினால், 08 கோடி ரூபா நிதியில் அமைக்கப்பட்ட இக் கட்டிடத்தில் சுமார் 500ற்கும் மேற்பட்டவர்கள் அமருமளவான மண்டபம் உள்ளிட்ட வகுப்பறைகளைக்கொண்டவையாகும்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வுக்கு, பாராளுமன்ற உறுப்பினர் பைஷல், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் புத்தளம் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளருமான தாஹீர், புத்தளம் பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்டவர்களுடன் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

வீடியோ

Related posts

சினிமா திரையரங்குகளை திறக்க அனுமதி

எகிறும் பாராளுமன்ற கொத்தணி : வாசுதேவவுக்கு தொற்று

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor