உள்நாடுவீடியோ

வீடியோ | பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ள சட்டத்தரணிகள்

உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது பொலிஸாரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வட மாகாண சட்டத்தரணிகள் இன்று (07) ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள் இணைந்து போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளனர்.

இந்தப் போராட்டமானது யாழ்ப்பணத்தில் உள்ள நீதிமன்ற வளாகம் முன்னிலையில் இன்று காலை (07) ஆரம்பமானது.

இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

-பிரதீபன்

வீடியோ

Related posts

சுமார் ஒரு மணி நேரம் மின்வெட்டு

போலி அடையாள அட்டை தயாரித்த இருவர் கைது

புதிய பொலிஸ் மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றார் பிரியந்த வீரசூரிய

editor