உள்நாடுவீடியோ

வீடியோ | இலங்கை வந்த பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன்!

இந்திய சினிமா நட்சத்திர பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் இன்றைய தினம் (02) இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.

சிட்டி ஒப் ட்ரீம்ஸ் நட்சத்திர விடுதியின் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கை வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒரு நாள் குறுகிய பயணமாக நாட்டிற்கு வந்த ரோஷன், இந்தியாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மாலை 5.10 மணிக்கு கட்டுநாயக்காவில் தரையிறங்கினார்.

இந்நிகழ்வுக்கு பாலிவுட் நட்சத்திரமான ஷாருக்கான் வருகை தரவிருந்த நிலையில், படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயத்துக்கு அமெரிக்காவில் சிகிச்சை பெறுவதால் அவரது வருகை ரத்து செய்யப்பட்டிருந்தது.

அவருடன் எட்டு துணை நடிகர்கள் கொண்ட குழுவும் வருகை தந்தது.

பாலிவுட் நட்சத்திரத்தையும் அவரது பரிவாரங்களையும் வரவேற்க கடுமையான பாதுகாப்பு நடைமுறையில் இருந்தன.

வீடியோ

Related posts

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் – துப்பாக்கி இயங்காததால் உயிர் பிழைத்த நபர் – நீர்க்கொழும்பில் சம்பவம்

editor

225 பேரும் ஒன்றிணைந்தால் மது,போதையில்லா நாட்டை உருவாக்க முடியும் – சஜித் பிரேமதாச.

புத்தாண்டை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளுக்கு பூட்டு